வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 180 பேர் விடுவிப்பு!

வவுனியா வேலங்குளம் விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட 180 பேர், இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.கடற்படை முகாமுக்கு, கடந்த இரு வாரங்களுக்கு முன்னர், கடற்படையை சேர்ந்த குடும்பத்தினர் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றிய கடற்படை உத்தியோகத்தர்களுக்கு, கோரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.

அதனடிப்படையில், வவுனியா வேலங்குளத்தில் அமைந்துள்ள முகாமிற்கு, கடற்படை உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 180 பேர், பேருந்துகளின் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், கொவிட்-19 தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட 180 பேர், தத்தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதன் போது, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டமைக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இன்று விடுவிக்கப்பட்டவர்கள், நீர்கொழும்பு, அனுராதபுரம், குருணாகல், பொல்காவல, ரப்பாவ ஆகிய பகுதிகளை சேர்ந்த கடற்படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆவர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!