ராஜித சேனாரத்ன கைது – ஜனநாயக விரோத செயல் – சஜித்

கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, ஜாதிக ஹெல உறுமய தலைவர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் ரிஷாட் பத்தியுத்தின் மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா ஆகியோர் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெளிவுபடுத்தியிருந்தனர்.தொடர்ச்சியாக இதன் போது கருத்து தெரிவித்ததை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர், ராஜித சேனாரத்ன நாட்டுக்கும் சுகாதார துறைக்கும் பாரியளவு சேவையாற்றிய ஒருவராவார் இன்று வரையில், அவர் சமூகத்திற்கு பல சேவைகளையாற்றியுள்ளார், மக்களுக்கான பல நேரங்களிலும் பல சேவைகளை செய்துள்ளாரென தெரிவித்தார்

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் எமது கட்சியினரின் மீது தரேன் ஒரு அபிப்பிரயாத்தி உருவாக்குவதே நோக்கமாகும், அனால் நாம் இது குறித்து கவலையடையவோ அச்சமடையவோ இல்லை, முற்றிலும் இது அரசியல் பழிவாங்களாகவே நாம் கருதுகிறோம் உண்மையும் அதுவேயாகுமென ஜாதிக ஹெல உறுமய தலைவர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க நாம் அனைவரும் அறிந்த விடயமே. அவர் அரசுக்காக எவ்வளவு பாரிய சேவையறியுள்ளார் என்பது குறித்து மேலும் தேர்தல்கள் நெருங்கி வரும் போது தன்னை தானே அர்ப்பணித்து பணியாற்றும் ஒருவருமென ஸ்ரீலங்க முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்

உண்மையில் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டமை அரசியல் நோக்கமாகும் மக்கள் மனதில் அவரைப் பற்றிய ஒரு தவறான எண்ணத்தை உருவாக்குவதற்கே இவ்வாறானதொரு செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது, இது முற்றிலும் அரசியல் பழிவாங்களாகும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை, நாம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் தொடர்ச்சியாக அவருடன் இணைந்திருப்போமென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா கருத்து வெளியிட்டார்ராஜித சேனாரத்ன சிறைவிகளுக்கு அனுப்பப்பட்டமை ஏறுகொள்ளமுடியதவொன்றாகவும், அரசியலில் இருந்த காலங்களில் அனைத்து மக்களும் இனம் மத மொழி பேதமின்றி ஒற்றுமையாக வாழ வேண்டுமென நினத்தவராவார்.

இவ்வாறனதொருவரை சிறையில் அடைப்பதன் மூலம் ஜனநாயக குரலை நசுக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறதென அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் ரிஷாட் பத்தியுத்தின் கருத்து வெளியிட்டிருந்தார்

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!