மட்டக்களப்பில் குழாய் நீர் விநியோக வசதி!

குவைத் நாட்டின் அந்நூர் பவுண்டேசன் அமைப்பு மட்டக்களப்பு மத்திய வலயக் கல்வி அலுவலகத்திற்கென குழாய் நீர் விநியோக வசதியினை ஏற்படுத்தி வழங்கியுள்ளது.இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு வலயக் கல்விப்பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா தலைமையில் நடைபெற்றது.

இத்திட்டத்தின்கீழ் வலயக் கல்விப்பணிமனை ஊழியர்களும் அப்பிரதேசத்தினூடாகச் செல்லும் பாதசாரிகளும் பயன்பெறத்தக்கதாக இரண்டு தொகுதி குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகர சபையின் முன்னாள் முதல்வர் எம்.ஐ.எம்.தஸ்லிம், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினர் அன்வர் மற்றும் கல்வித்திணைக்கள அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

அந்நூர் பவுண்டேசன் தலைவர் எஸ்.எம்.அலியார் மற்றும் உப தலைவர் கலாநிதி றிப்கி றம்ஸான் ஆகியோரின் வழிகாட்டலில் இலங்கை நாட்டில் இவ்வுதவித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!