இலங்கையிலிருந்து, அமெரிக்காவுக்கு முகக்கவசங்கள் அனுப்பி வைப்பு!

அமெரிக்காவுக்கு 200 மில்லியன் முகக்கவசங்களை இலங்கை அனுப்பி வைத்துள்ளது.கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்த்தில் அமெரிக்கவிற்கு ஆதரவு வழங்கும் முகமாக இலங்கை பிராண்டிக்ஸ் தொழிற்சாலைகளில் தயாரித்த 200 மில்லியன் முகமூடிகளை அமெரிக்காவுக்கு இலங்கை அனுப்பி வைத்துள்ளது

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சகோதரர் பசில் ராஜபக்ஷ, அமெரிக்க தூதர் அலினா பி டெப்லிட்ஸுக்கு ஒரு தொகுதி முகமூடிகளை வழங்கி வைத்துள்ளார்

குறித்த முகமுடி இலங்கையில் தயாரிக்கப்பட்டதோடு மற்றும் கிருமிகளைக் கொல்லும் வல்லமை கொண்டுள்ளது

இந்த உலகளாவிய தொற்றுநோயை உலகம் எதிர்த்து நிற்கும்போது, அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்பு இந்த சவாலை சமாளிக்க எங்கள் இரு நாடுகளுக்கும் உதவுகிறது’ என்றும் அமெரிக்க தூதர் அலினா பி டெப்லிட்ஸ் இதன் போது தெரிவித்தார்

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!