பிலிப்பைன்ஸைத் தாக்கும் புயல்!

கொரோனா தொற்றுத் தாக்கத்திற்கு மத்தியில், ‘அம்போ’ என்ற சக்தி வாய்ந்த புயல், பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்குப் பகுதியில் சமர் தீவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.சமர் தீவின் கிழக்குப் பகுதியில் சான் பொலிகார்போ நகரில் வீசிய அம்போ என்ற புயலால், ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், குறித்த புயல் விரைவில் சமர் தீவை முழுமையாகத் தாக்கும் எனவும், இதனால் பெருமளவில் சேதம் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் சமர் தீவில் உள்ள சுமார் 4 இலட்சம் பேரை பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால், முறையாக சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என அந்த நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் சமர் தீவில் இருந்து வெளியேற்றப்படும் மக்கள் கொரோனா நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருக்கும் தனிமைப்படுத்தும் மையங்களில் தங்க வைக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு, மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அத்தியாவசிய தேவைகளைத் தவிர வேறு காரணங்களுக்காக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென பிலிப்பைன்ஸ் அரசு எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!