முழங்காவிலில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீடுதிரும்பினர்!

கிளிநொச்சி – முழங்காவில் 651வது படைப்பிரிவின் முகாமில்​ தனிமைப்படுத்தப்பட்டிருந்த 60 பேர், கொரோனா தொற்றில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.பண்டாரநாயக்க மாவத்தை, வாழைத்தோட்டம், மீதொட்டமுல்ல, வெல்லம்பிட்டிய, கொட்டகேன போன்ற பகுதிகளைச் சேர்ந்த 60 பேரே இவ்வாறு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

60 பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனையின்போது, தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, மருத்துவ சான்றிதழ்கள் வழங்கி, இன்று அவர்களது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவச் சான்றிதழ்களை, 651ஆவது படை முகாமின் இராணுவ அதிகாரி வழங்கி வைத்தார்.

இதனையடுத்து குறித்த 60 பேரும் நான்கு இராணுவ பேருந்துகளில் தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதன்போது தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களில் ஒருவர், 651ஆவது முகாமின் இராணுவ அதிகாரியின் உருவத்தை வரைந்து அதனை நினைவுப் பரிசாக வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!