225 கோடி பெறுமதியான ஹெரோயின் மீட்பு!

ராகம, வெலிசறை பகுதியில் 225 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த நால்வரிடமிருந்தும் 225 கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த போதைப்பொருள் அரிசிப் பைகளில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் பொலிஸார் குறித்த நால்வரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து பெறுமதியான வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!