2008ல் காணாமல் போன மோட்டார் சைக்கில் 2019ல் கண்டுபிடிப்பு

அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட தம்பட்டை பகுதியில் உள்ள வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில் 2008ஆம் ஆண்டு பல்சர் கறுப்பு நிற மோட்டார் சைக்கில் ஒன்று திருட்டு போய் இருந்த நிலையில் சுமார் 11வருடங்களாக தேடப்பட்டு வந்த மோட்டார் சைக்கில் இன்று சனிக்கிழமை திருக்கோவில் பொலிசார் கண்டு பிடித்துள்ளதுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

இவ் பல்சர் மோட்டார் சைக்கிலானது கடந்த 2008ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20ந் திகதி தம்பட்டையில் வாகன உரிமையாளரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் 3இலட்சத்தி 39000 ஆயிரம் பெறுமதியான BEY-0772 இலக்கமுடைய மோட்டார் சைக்கில் கொள்ளையிட்டு இருந்தன.

இதனைத் தொடர்ந்து திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இவ் மோட்டார் சைக்கில் திருட்டு தொடர்பாக உரிமையாளர் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்ததைத் தொடர்ந்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளபோதிலும் மோட்டார் சைக்கிலும் அதனை கொள்ளையிட்ட நபர்களும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை(29) திருக்கோவில் பொலிசாருக்கு மோட்டார் சைக்கிலின் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யப்படவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.ஜெயவீர,பெரும் குற்றப் புலனாய்வு பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.சதாத் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களான அலியார், சலீம், திலகசிறி ஆகிய பொலிஸ் குழுவினர் விரைந்து சென்று விநாயகபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து சந்தேக நபரை கைது செய்ததுடன் மோட்டார் சைக்கிலின் உதிரிப்பாகங்களையும் கைப்பற்றியுள்ளன.

இவ் சம்பவம் தொடர்பாக திருக்கோவில் பொலிசாரின் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பெரும் குற்றப் புலனாய்வு பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.சதாத் தெரிவித்துள்ளார்.

 

Recommended For You

About the Author: Karthikesu

error: Content is protected !!