ஐரோப்பிய யூனியன் கொடுத்த நிதியை  மக்களுக்காகப்  பயன்படுத்தவும் – சஜித்

ஐரோப்பிய யூனியன் இலங்கைக்கு வழங்கிய 450 கோடி பணத்தை மக்கள் நலனுக்காக உடனடியாக செலவு செய்ய வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஐரோப்பிய யூனியனின் தூதுவர் டெனிஸ் ஸெய்ப்க்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்குமிடையில் கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

ஐரோப்பிய யூனியன் இலங்கை பொருளாதாரத்தையும் மற்றும் மக்கள் வாழ்க்கையையும் கட்டி எழுப்புவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி மிக வேகமாகவும் முறையாகவும் தங்களது தலையீட்டை மேற்கொண்டு வருகிறது.

இலங்கைக்கு 22 மில்லியன் யூரோ அல்லது 450 கோடி ரூபா உதவி ஐரோப்பிய சமூகத்திடமிருந்து கிடைக்கபெற்றிருக்கிறது.

குறித்த பணத்தில் சுகாதார உபகரணங்களைப் பெறுவதற்கு 41 கோடி ரூபாவும், சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு 71 கோடி ரூபாவும், விவசாயத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு 331 கோடி ரூபாவும் உதவியாக வழங்கப்படவுள்ளது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்த்தர்.

மேலும் இச்சந்திப்பின் போது ஐரோப்பிய தூதுவரிடம், நாட்டின் சிறு மற்றும் மத்தியமட்ட கைத்தொழில் துறையினர் எதிர்நோக்கி இருக்கின்ற நிதிப் பிரச்சினையை மேம்படுத்துவதற்கு உதவுமாறும், நாட்டினுடைய கைத்தொழில்சாலைகளுடைய ஊழியர்களது தொழில் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே நிதி ரீதியாக பலப்படுத்தலை ஐரோப்பிய சமூகத்திடமிருந்து பெற்று கொடுக்க வேண்டுமெனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!