உலகப் பொருளாதாரம் பாரியளவில் சரிவடையும் – ஐ.நா

உலகில் கொரோனா பரவல் காரணமாக, உலகப் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் 3.2வீதம் என்ற அளவில் சரியும் என்று
ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஐ.நா. சபை நேற்று வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கடந்த ஜனவரி மாதத்தில், அதாவது கொரோனா பரவல் தீவிரமடைந்ததற்கு முன்பாக, வெளியிட்ட கணிப்பில் நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 2.5 சதவீதமாக இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது பொருளாதாரம் 3.2 சதவீதம் சரியும் எனவும், கொரோனா பரவல் தொடர்ந்து நீடித்து உலக நாடுகளின் ஊரடங்கு மூன்றாம் காலாண்டுக்கும் நீடிக்குமானால், நடப்பு ஆண்டில் பொருளாதாரச் சரிவு 4.9 சதவீதத்தைத் தொடும் எனவும் ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகப் பொருளாதாரம் 8.5 டிரில்லியன் டொலர் இழப்பைச் சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 1930-ம் ஆண்டில் ஏற்பட்ட பேரழுத்தக் காலகட்டத்துக்குப் பிறகு உலகம் சந்திக்கும் மிகப் பெரிய பொருளாதாரச் சரிவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!