யாழில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு, மீண்டும் அறிகுறி!

கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் சிகிச்சைபெற்று வீடு திரும்பிய அரியாலையை சேர்ந்த ஐவருக்கு கொரோனா தொற்று சிறிதளவு இருப்பதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.அரியாலை பகுதியை சேர்ந்த இவர்கள் கடந்த மாதம் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று இரண்டு கிழமைக்கு முன்னர் வீடு திரும்பியவர்கள். நேற்றைய பரிசோதனையில் இவர்களில் ஐவருக்கு வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னமும் காணப்படுவதாக
கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே அவர்கள் ஐவரும் தொடர்ந்தும் இரண்டு கிழமை அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும் எனவும், இரண்டு கிழமையின் பின்னர் மீண்டும் அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் நோய் தொற்று தடுப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நேற்றையதினம் 27 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!