தொடரூந்து சேவைகளை மேலும் அதிகரிக்கத் திட்டம்!

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 20 நாளாந்த தொடரூந்து சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மேலும் அதிரிக்கப்படவுள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.அடுத்த வாரத்திற்கான தொடரூந்து நேர அட்டவணையை திருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொடரூந்து போக்குவரத்து அதிகாரி காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

தொடரூந்துகளில் பயணிப்பதற்காக விசேட அனுமதிப் பத்திரத்தைக் கோரி 11 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்டோர் தொடரூந்து திணைக்களத்திற்கு இணையத்தளம் ஊடாக விண்ணப்பித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!