பிசிஆர் சோதனைகளை தொடரவேண்டும்! – மருத்துவ அதிகாரிகள் சங்கம்

நாட்டில் கொரோனா தொற்றை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் பிசிஆர் சோதனைகளை குறைப்பதால் ஆபத்தான நிலை உருவாகலாம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைகின்ற போதிலும் நாடு முற்றாக ஆபத்திலிருந்து விடுபடவில்லை என்பதால் பிசிஆர் பரிசோதனைகளை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைவதால் பிசிஆர் பரிசோதனைகளை குறைப்பது குறித்து அதிகாரிகள் சிந்திப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நாட்டில் சுதந்திரமாக நடமாடுவதை தவிர்ப்பதற்காக பிசிஆர் பரிசோதனைகளை தொடரவேண்டும் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

நாடு பொருளாதார நடவடிக்கைகளுக்காக மீள திறக்கப்பட்டுள்ள போதிலும் சோதனைகளை தொடர்வது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய கொரோனா தொற்று ஆபத்தை கட்டுப்படுத்துவதற்கு தீவிரமான சோதனைகள் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!