உலகளவில் 3 இலட்சத்தைக் கடந்தது கொரோனா உயிரிழப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று காலை நிலவரப்படி 3 இலட்சத்து 3 ஆயிரத்து 372பேர் உயிரிழந்துள்ளனர்.17 இலட்சத்து 3 ஆயிரத்து 808 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு, உலகளவில் 4.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை நிலவரப்படி, கொரோனா வைரஸ் தொற்றினால் 45 இலட்சத்து 25 ஆயிரத்து 420பேர் பாதிப்படைந்துள்ளனர்.

மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு அதிக உயிரிழப்புக்களையும், பாதிப்பையும் எதிர்கொண்டுள்ள நாடாக அமெரிக்கா காணப்படுகின்றது.

இதுவரை அமெரிக்காவில், 14 இலட்சத்து 57 ஆயிரத்து 593பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 86 ஆயிரத்து 912 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளாக ஸ்பெயின், ரஷ்யா, பிரித்தானியா, இத்தாலி ஆகிய நாடுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!