யாழ் மந்திகையில் துப்பாக்கிச்சூடு: இளைஞன் படுகாயம்!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மந்திகை பகுதியில் ஊரடங்கு வேளையில் பயணித்த இளைஞன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்
சூட்டில் குறித்த இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்தச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் புலோலியைச் சேர்ந்த 22 வயதுடைய பசுபதி அனுசன் என்ற இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.

பருத்தித்துறை மந்திகை பகுதியில் இன்று அதிகாலை ஊரடங்கு வேளையில், குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது இராணுவத்தினர் மறித்துள்ளதாகவும், எனினும் அதனை மீறி சென்றபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!