கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 09 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 925 ஆக அதிகரித்துள்ளது.தொற்றுக்குள்ளானவர்களில் 445 பேர், தொற்றில் இருந்து குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

471 கொரோனா தொற்றாளர்கள், நாடு முழுவதும் உள்ள 7 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும்,
இதுவரை 9 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாகவும், சுகாதார மேம்பாட்டுப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!