மன்னார் பிரதேச சபையின் 26 ஆவது அமர்வு!!

மன்னார் பிரதேச சபையின் 26 ஆவது அமர்வு, தலைவர் சாகுல் ஹமீட் முஹமது முஜாகீர் தலைமையில் இடம்பெற்றது.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, அலுவலக கேட்போர் கூடத்தில் அமர்வு நடத்தப்பட்டது.

பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்ட போதும், 3 விடயங்கள், ஏகமனதான தீர்மானத்திற்கு கொண்டுவரப்பட்டது.

கூட்டம் இடம்பெற்ற சிறிது நேரத்தின் பின்னர், உறுப்பினர் முன்வைப்பின் போது, உறுப்பினர் கதிர் காமநாதன் விஜயன் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, அனைத்து உறுப்பினர்களும், ஒரு நிமிட அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், தொடர்ச்சியாக ஏனைய விடங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!