முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபை அமர்வு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபை அமர்வில், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

பிரதேச சபை தவிசாளர் செல்லையா பிறேமகாந் தலைமையில் இடம்பெற்ற அமர்வில், முதலில் உயிரிழந்த உறவுகளுக்காக, அக வணக்கம் செலுத்தப்பட்டு, மொழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன் பின்னர், இன்றைய அமர்வுகள் இடம்பெற்றன.

இதன் போது, புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும், பல்வேறு வேலைத் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காலப்பகுதியில், சபையால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், அதனை தொடர்ச்சியாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்று நிலவி வரும் காலப்பகுதியில், சபைக்குட்பட்ட பகுதிகளில், பொதுச் சந்தைகள், மீன், இறைச்சி விற்பனை நிலையங்கள், நீண்ட கால குத்தகை கடைகள், நில வாடகைகள் போன்றவற்றுக்கான விலக்களிப்பு நடவடிக்கைகள், கடந்த மார்ச் மாதம் 17ம் திகதியில் இருந்து, எதிர்வரும் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு முன்னெடுப்பதாக, சபையால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்ற நிலையில், மக்கள் கூடுகின்ற பகுதிகளில், சபையினால் அவை தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த விடயங்களை மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதற்கு, சபை நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!