அம்பாறையில் 10 இலட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை!

அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற திருட்டுச்சம்பவத்தில் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரைதீவு 9ஆம் பிரிவில் வசிக்கும் மனோகரன் பிரபாகரன் என்பவரின் வீட்டில் இரவு உட்புகுந்த திருடர்கள் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

காரைதீவுப் பிரதேசங்களில் இப்படியான கொள்ளைச் சம்பவம் இதுவரை இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற திருட்டுச்சம்பவமானது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக சம்மாந்துறைப் பொலிசார் மோப்பநாய் சகிதம் குறிப்பிட்ட வீட்டிற்குச் சென்று மேலதிக நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!