நாட்டில் மீண்டும் ஊரடங்கு!!

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில், மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு இன்று மாலை வெளியிட்டுள்ளது.

ஏனைய 23 மாவட்டங்களிலும், தொடர்ந்து இரவு 8.00 மணியில் இருந்து அதிகாலை காலை 5.00 மணி வரை, ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.

நாடளாவிய ரீதியில், 17 ஆம் திகதி அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம், 18 ஆம் திகதி அதிகாலை காலை 5.00 மணிக்கு, கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தளத்தப்படவுள்ளது.

மேலும், 23 மாவட்டங்களிலும், 19 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரையில், தினமும் இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை, ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என, ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!