அரசியல் பழிவாங்கல் முன்னெடுக்கப்படவில்லை : அபேயவர்தன!

ராஜித சேனாரத்னவை கைது செய்தமையினால் நாம் அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவதாக எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது என முன்னாள் பாராளுமனர் உறுப்பினர் லக்ஷ்மன் யப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெறமுண தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

வெள்ளை வேன் தொடர்பான பிரச்சினைக்கு நேற்றை தினம் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டுள்ளார் இவ்வாறு அவர் கைது செய்யப்பட்டமை எமது கட்சி சார்பில் நாம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டு வருகின்றனர்.

உண்மையில் இது நீதிமன்றத்தின் தீரப்பாகும் இதில் எமது எவ்வித அரசியல் தலையீடுகளும் இல்லை.

முற்றுமுழுதாக நீதிபதியின் முடிவுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தீர்மானமாகும், எனவே குறித்த நீதிமன்ற முடிவுகளில் யாரும் தமது சொந்த தலையீடுகளை செய்ய அனுமதிகள் இல்லை

இந்நிலையில் எமது அரசியலின் மூலம் இவ்வாறான எவ்வித தீர்மானங்களை மேற்கொள்ள அவசியமில்லை.

குறித்த முடிவு மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணங்களும் நீதிபதியின் மூலம் மிக சிறப்பாக விபரிக்கப்பட்டிருந்தது.

இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாவிடின் விசேட நீதிபதியிடம் சென்று இவற்றுக்கு எதிராக மனு தாக்கல் செய்யும் முடியும்.

அவ்வாறு செய்யப்படும் மனு தாக்கல் மூலம் விசேட நீதவான்கள் தமது கவனத்தை செலுத்தி முறையான தீர்வுகள் பெற்று கொடுக்கலாம்.

அல்லது மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு உடன்பாடு தெரிவிக்கலாம் எனவே நீதிமன்றத்தின் செயலில் நாம் எமது தலையீடுகளை செய்ய வேண்டிய எவ்வித அவசியமும் எமக்கு இல்லை.

மேலும் நான் தெளிவாக குறிப்பிடுகிறேன், கடந்த கலங்ககளில் ராஜித சேனாரத்ன வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

உடல் நலம் குறைவாகவுள்ளதாக தெரிவித்திருந்தார். இவ்வாறான காலப்பகுதியில் நீதிமன்றம் அவரை சுதந்திரமாக விட்டு வைத்திருந்தது, அதே போல் தற்போது நீதிமன்றம் தமது கடமையை செய்து வருகிறது எனவே குறித்த நீதிமன்றத்தின் செயற்பாடுகள் மூலம் எமது அரசியல் நோக்கங்களையோ, பழிவாங்க்கலயோ பிரயோகிப்பதாக குறிப்பிடுவது பொய்யாக்கும். என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!