மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் – மயாந்த திஷாநாயக்க

கொரோனா தொற்றின் காரணமாக பொருளாதார நெருக்கடி மற்றும் சுகாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் மக்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் விட தேர்தல் அவசியமற்ற ஒன்றாகுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயாந்த
திஷாநாயக்க தெரிவித்துள்ளார்ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

கொரோனா தொற்றின் காரணமாக பொருளாதார நெருக்கடி மற்றும் சுகாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் மக்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் விட தேர்தல் அவசியமற்றது அதனாலேயே தேர்தலை நடத்த முன்னர் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தெரிவிக்கின்றோம்.

ஆனாலும் எதிர் தரப்பினர் நாங்கள் தேர்தலுக்கு அஞ்சியே இவ்வாறு கூறிவருவதாக மக்களிடம் காண்பிக்க முயற்சிக்கின்றனர்

அரசாங்கம் தம்மிடம் நிதி இல்லை என்று கூறிக்கொண்டு அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்காக வழமை ஒப்பந்த திட்டத்திற்கு புறம்பாக அவர்களுக்கு சாதகமான நிறுவனமொற்றுக்கு ஒப்பந்த பணம் வழங்குவதற்காக, அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக் கொண்டுள்ளது.

அதற்கமைய 31.7 பில்லியன் ரூபாவை வழங்குவதற்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டுள்ளது. வைரஸ் பரவலின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கான தேவை என்ன? தற்போது மக்களின் நலனை பாதுகாப்பதே அவசியமான ஒன்றாகும்

கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதற்காக பாராளுமன்றத்தை ஒரு நாள் மாத்திரமாவது மீண்டும் கூட்டி கொரோனா தொடர்பான சட்டம் மற்றும் நிதி ஒதுக்கீட்டை மெற்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றும் இதன் போது முன்னாள் பாராளுமனற உறுப்பினர் மயாந்த திஷாநாயக்க தெரிவித்தார்

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!