தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி!!

நுவரெலியா டிக்கோயா மணிக்கவத்த தோட்டப் பகுதியில், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இலங்கை சமூக அபிவிருத்தி நடுவகம் அமைப்பினால், நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கே உதவிகள் வழங்கப்பட்டன.

அம்பகமுவ பிரதேச செயலர் சித்தார ருவினி கமகேயின் வேண்டுகோளுக்கு இணங்க, அவசர கால உதவி திட்ட குழுவின் ஹட்டன் பிரதேச இனைப்பாளர் பி.ஜெக்ஷன் தலைமையில், பொருட்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில், கிராம உத்தியோகத்தர், இளைஞர் சேவைகள் அதிகாரி ஆர்.கனகராஜ் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன் போது, அரிசி, கோதுமை மா, பருப்பு, பால்மா, டின்மீன், தேங்காய், சீனி, மிளகாய்த்தூள், பிஸ்கட் வகைகள், தேங்காய் எண்ணெய், வெள்ளைப்பூடு, வெங்காயம் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டதுடன், கற்றல் உபகரணங்களை இழந்த மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!