மங்கள குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை!!

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, இன்று பிற்பகல் 2.00 மணியளவில், கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையானார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு வாக்காளர்களை அழைத்துச் செல்வதற்கு, இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளுக்கு, நிதி வசதியை ஏற்படுத்திக் கொடுத்தமை தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனிடம், ஏற்கனவே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, விசாரணைக்கு செல்வதற்கு முன்பதாக, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

நான் ஏன் அழைக்கப்பட்டுள்ளேன் என்பது எனக்கு தெரியாது.

வரச் சொன்னார்கள் வந்தேன்.

உள்ளே போய் திரும்பி வந்தால், பின்னர் விரிவாக பதிலளிக்க முடியும்.

ராஜபக்ச அரசு, கடந்த காலத்திலும் மூன்று தடவைகள் எம்மை இங்கே அழைத்துக் கொண்டது.

அதற்கு தாம் பதிலளித்திருந்தோம்.

தற்போதும் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

திம்பி வந்தால் முழுமையான விடயத்தை தெரிவிக்க முடியும். என்றார்.

இதன் போது, தாம் திரும்பி வர வேண்டும் என பிரார்த்திக்குமாறு கூறி உள்ளே சென்றார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!