வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு!

கண்டி நாவலப்பிட்டி மாவெலி ஆற்றில் இருந்து வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.நாவலப்பிட்டி மாகும்புர பிரதேசத்தை சேர்ந்த, 88 வயதுடைய, 5 பிள்ளைகளின் தாயான கே.வெள்ளையம்மா என்பவரே, இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வயோதிப பெண், நேற்று வெற்றிலை வாங்கி வருவதாக கூறி, வீட்டில் இருந்து சென்ற நிலையில், மாவெளி ஆற்றை ஊடறுத்து செல்லும், புகையிரத பாலத்தில் நடந்து செல்லும் போது, தவறி ஆற்றில் விழுந்திருக்கலாம் என, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பொலிஸாரும் பொது மக்களும், நேற்று மாலை முதல் வயோதிப பெண்ணை தேடிய நிலையில், புகையிரத பாலத்தில் இருந்து, 200 மீட்டர் தூரத்தில், ஆற்றில் குழியில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம், பிரேத பரிசோதனைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!