பலாங்கொடை, றய் இலக்கம் 2 தோட்டத்தில் தீ விபத்து!

இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொடை, றய் இலக்கம் 2 தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், வீடு ஒன்று முற்றாக சேதம் அடைந்துள்ளதுடன், அருகில் இருந்த வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.இன்று காலை 8.00 மணியளவில் கோவில் பூசகர் சசிகுமாரின் வீடு முற்றாக எரிந்துள்ளதுடன், 20 ஆயிரம் ரூபா பணமும், பாடசாலை புத்தகங்களும் எரிந்து நாசமாகியுள்ளது.

வீட்டில் ஏழு பேர் இருந்த நிலையில், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இந்த நிலையில், தீ ஏற்பட்டமைக்கான காரணம் தெரியவராத நிலையில், பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!