யாழ், நவாலி சென் பீற்றர் தேவாலய நினைவுத்தூபியில் அஞ்சலி!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, இரண்டாம் நாளான இன்று, யாழ்ப்பாணம் நவாலி சென் பீற்றர் தேவாலய பகுதியில் உள்ள நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில், வலிகாமத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள், தேவாலயத்தில் ஒன்றுகூடி இருந்த நிலையில், விமானத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தனர்.

அவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில், சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று முற்பகல் 11.00 மணியளவில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுக்கு, மானிப்பாய் பொலிஸாரினால் தடை விதிக்கப்பட்டது. எனினும் பின்னர் அஞ்சலி நிகழ்வு செலுத்தப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் என ஒரு சிலர் மட்டும் அஞ்சி செலுத்தியுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!