அல்குர் ஆனில் நல்ல விடயங்கள் பல கூறப்பட்டுள்ளன:கண்டி சுதுஹும்பொல விஹாராதிபதி

அல்குர் ஆனில் நல்ல விடயங்கள் பல் கூறப்பட்டுள்ளதாக கண்டி சுதுஹும்பொல விஹாராதிபதி தெரிவித்துள்ளார்.

அல்குர் ஆனில் உயிரைக் கொல்லவோ கழுத்தை வெட்டவோ சொல்லவில்லை என்று கண்டி சுதுஹும்பொல விஹாராதிபதி தெரிவித்துள்ளார்.

கண்டி கட்டுக்கலை ஜூம்ஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சர்வமத சகழ்வாழ்வு தொடர்பான விசேட நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார்.

கண்டி கட்டுக்கலை ஜூம்ஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில் சர்வமத சகழ்வாழ்வு தொடர்பான விசேட நிகழ்வு பள்ளிவாசல் தலைவர் அப்சல் மரைக்கார் தலைமையில் நேற்று இடம்பெற்றது.

இங்கு கருத்து தெரிவித்த கண்டி சுதுஹும்பொல விஹாராதிபதி, நான் ஒரு போதும் பள்ளிவாசலுக்கு வந்ததில்லை.

வந்ததன் பின்னர் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

என்ன நடக்கிறது என்கின்ற உண்மைத் தன்மையைச் சொல்ல வேண்டும்.

இது பற்றித் தெரியாத காரணத்தனால் ஒவ்வொருவடைய மதங்களுக்கிடையே பிரிவினைகள் ஏற்பட்டுள்ளன.

எனினும் குர்ஆனில் என்ன இருக்கிறது என்று படிக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு நீண்ட காலமாக இருந்தது.

மௌலவி ஒருவர் மிகுந்த இரக்கத்துடன் அதனைக் கொண்டு வந்து தந்தார்.

இரு வாரங்களாக அந்த குர்ஆனை வாசிக்க ஆரம்பித்தேன்.

எனினும் அந்த குர்ஆனை வாசிக்கும் போது எனக்கு தெரியாத விடயங்கள் தொடர்பாகவும் உண்மையிலேயே எங்களால்உருவாக்க முடியாதளவுக்கு எமது சிறப்பான வாழ்க்கை அம்சம் அதில் காணக் கூடியதாக இருந்தது.

இதுவரையிலும் நாங்கள் இஸ்லாம் பற்றி அம்சங்களை தெளிவில்லாமல் விளங்கிக் கொண்டிருந்துள்ளோம்.

குர்ஆனில் முஸ்லிம்கள் பிழையற்றவர்கள், பரிசுத்தமானவர்கள், உண்மைத் தன்மை வாய்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந் நாட்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் முழு இலங்கையும் பாதிக்கப்பட்டது.

கிறிஸ்தவ மக்கள் மட்டுமல்ல நாட்டிலுள்ள எல்லாயின மக்களும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

ஆனால் குர்ஆனில் உயிரைக் கொள்ளவோ கழுத்தை வெட்டவோ சொல்ல வில்லை என்று கூறினார்.

கண்டி கட்டுக்கலை ஜம்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் சர்வமத சகழ்வாழ்வு தொடர்பான விசேட நிகழ்வு பள்ளிவாசல் தலைவர் அப்சல் மரைக்கார் தலைமையில் நேற்று இடம்பெற்றது.

முஸ்லிம்கள் விசேட தினமான வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்நிகழ்வில் இதில் இடம்பெறும் மார்க்கச் சொற்பொழிவையும் வணக்க வழிபாட்டையும் நேரில் கண்டு களிப்பதற்காக பௌத்த சமயத் தலைவர்கள், சிங்கள, தமிழ் வர்த்தகப் பிரமுகர்கள், கண்டி மாநகர சபை உறுப்பினர்கள் வருகை தந்திருந்தார்கள்.

இந்நிகழ்வில் மார்க்கச் சொற்பொழிவை மௌலவி அம்ஹர் ஹக்கம் நிகழ்த்தினார். கண்டி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் கே.ஆர்.ஏ.சித்தீக் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். (நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!