அமைதியான நாட்டை உருவாக்க மாணவர்களுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொடுக்க வேண்டும் : ஜனாதிபதி

பொலன்னறுவை, தம்பாளை அல் – ஹிலால் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின், புதிய மூன்று மாடி விஞ்ஞான ஆய்வுகூட கட்டடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு, இன்று நடைபெற்றது.

பாடசாலைக்குச் சென்ற ஜனாதிபதியை, மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
இதன் போது, ‘எழுச்சி பெறும் பொலன்னறுவை’ மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ், 280 இலட்சம் ரூபா செலவில், தம்பாளை அல் – ஹிலால் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, 3 மாடி விஞ்ஞான ஆய்வுகூடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அதனை பார்வையிட்டார்.

இந்த நிகழ்வில், வட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, கல்லூரியின் அதிபர் வஹாப்தீன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, ‘எழுச்சி பெறும் பொலன்னறுவை’ மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ், 186 இலட்ச ரூபா செலவில், தம்பாளை அல் – ரிபாய் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, 8 வகுப்பறைகளை கொண்ட இரண்டு மாடிக் கட்டடத்தை, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இன்று மாணவர்களிடம் கையளித்தார்.

பாடசாலைக்குச் சென்ற ஜனாதிபதியை, மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
வகுப்பறைக் கட்டடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி, அதனை பார்வையிட்டார்.
இந்நிகழ்வில், பாடசாலையின் அதிபர் ஏ.அஸீஸ், ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அங்கு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி.

அனைத்து மக்களும், சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய ஒழுக்கப் பண்பாட்டையும், அமைதியையும் கொண்ட ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு, நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும், சிறந்த கல்வியை பெற்றுக்கொடுப்பது அவசியம் என, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று, பொலன்னறுவை, தம்பாளை அல் – ஹிலால் முஸ்லிம் மகா வித்தியாலய நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டில் இன ரீதியாக பிரிந்து, வேறுபட்டு பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்வது, எந்தவொரு இனத்திற்கும் நல்லதல்ல.

நாட்டின் அனைத்து இனங்களும் சகோதரத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் வாழக்கூடிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கு, நான் அர்ப்பணிப்புடன் உள்ளேன்.
என குறிப்பிட்டார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!