மட்டக்களப்பில், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரணங்கள் வழங்கல் செயலமர்வு

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் ஏற்பாட்டில், மாவட்ட அரச திணைக்கள மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரணங்கள் வழங்கல் தொடர்பான செயலமர்வு, மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச மற்றும் கிராம மட்டத்தில் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரணங்கள் வழங்கல் போன்ற பணிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் முன்னாயத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இதன் கீழ் முன்னாயத்த நடவடிக்கைகளுக்கும் அரச திணைக்கள மற்றும் அலுவலக அதிகாரிகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ளும் நடவடிக்கைக்கான, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரணங்கள் வழங்கல் தொடர்பான செயலமர்வுகள் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில், இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதேவேளை, மாவட்ட செயலகமும், மட்டக்களப்பு சிறுவர் அபிவிருத்தி நிலையம் இணைந்து செயல்படுத்துகின்ற அபிவிருத்தி திட்டங்களுக்கு அமைவாக அனர்த்த அபாயங்கள் ஏற்படும் போது தகல்வல்களை வழங்குவதற்கான விபரங்கள் அடங்கிய விபர கோவை ஒன்றும், இன்று வெளியிட்டு வைக்கப்பட்டன.

அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரணங்கள் வழங்கல் தொடர்பாக நடைபெற்ற செயலமர்வில், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்கள உதவி பணிப்பாளர் எம்.எ.சி.எம்.ரியாஸ், மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக காணி அரசாங்க அதிபர் திருமதி நவருபரஞ்சனி முகுந்தன், பிரதம உள்ளக கணக்காளர் திருமதி இந்திராவதி மோகன் மற்றும் அனர்த்த முகாமைத்துவ திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர்கள், பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். (rp)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!