வவுனியாவில், போதை எதிர்ப்பு ஊர்வலம்

வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமும், வவுனியா மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த, போதையற்ற தேசம் நிகழ்வு, இன்று காலை குருமண்காட்டு சந்தியில் இடம்பெற்றது.

ஜனாதிபதியின் சிந்தனையில், கடந்த ஒரு வார காலமாக, போதைக்கு எதிரான நிகழ்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், இந்நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீனிவாசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், வவுனியா அரசாங்க அதிபர் ஐ.எம்.கனீபா சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியதுடன், போதைக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பலுன்களையும் பறக்கவிட்டார்.

இந்த நிலையில், போதைக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட ஸ்டிக்கர்கள் வாகனங்களில் ஒட்டப்பட்டதுடன், போதைக்கு எதிரான வாசகங்கள் எழுப்பட்ட பதாகைகளை தாங்கிவாறு, கவனயீர்ப்பு ஊர்வலமும் முன்னெடுக்கப்பட்டது.

குருமண்காட்டு சந்தியில் இருந்து ஆரம்பமான ஊர்வலம், வவுனியா சமூக சேவைகள் திணைக்களம் வரை சென்றடைந்து நிறைவு பெற்றது.

இதன் போது, வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள், செட்டிகுளம் பிரதேச செயலளார், பாடசாலை அதிபர்கள், முதியோர் சங்க பிரதிநிதிகள், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பினர், வெளிச்சம் அறக்கட்டளை நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!