மக்களின் கவனக்குறைபாடு காரணமாக விபத்து : அர்ஜுன

2 ஆயிரம் புதிய நவீன பஸ்களை இறக்குமதி செய்யவுள்ளதாக, போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் குறிப்பிட்ட விடயங்களை சொல்வதனால், நீங்கள் குறிப்பிட்ட விடயங்கள் ஏற்கனவே நான் தேடிப்பார்த்தேன்.

விபத்துக்கள் நடைபெறுவதற்கு புகையிரதத்தின் சாரதியோ அல்லது புகையிரதமோ காரணமல்ல.
மக்களின் கவனக்குறைவே காரணம்.

மக்கள் குறைவாக காணப்படும் பகுதிகளில், எச்சரிக்கை விளக்கு மற்றும் ஒலி சமிச்சை என்பனவற்றினை ஏற்படுத்தியிருக்கின்றோம்.

ஆயினும் அதனை பொருட்படுத்தாது, தொலைபேசியை காதில் வைத்துப் பேசிக்கொண்டு, கவனம் இல்லாமல் புகையிரத கடவையை கடப்பதனால் விபத்துக்கள் இடம்பெற்றிருக்கின்றன.

அதேபோன்று வீதிக்கடவையின் கதவை மூடியிருக்கும் போது, அதன் கீழாக செல்ல முற்படுகின்றார்கள். அதன்போது விபத்து இடம்பெறுகின்றது.

எனவே நான் எச்சரிக்கையை மீறி பயணிப்போருக்கான தண்டப் பணத்தினை அதிகரித்துள்ளேன்.
அவ்வாறு செய்வதனால் விபத்தினை குறைக்க முடியும் என நம்புகின்றேன்.

நாம் வெளிநாட்டுக்கு போனால், அங்கே மிகவும் கவனமாக வாகனத்தினை செலுத்துகின்றார்கள்.
இங்கே சட்டம் இருக்கின்றது. அதனை அமுல்படுத்துவதில் குறைபாடுகள் காணப்படுகின்றன.

30 வருடங்களின் பின்னர் புதுவிதமான நவீன பஸ்களை நாட்டிற்கு கொண்டு வந்திருக்கின்றோம்.
லொறி செசியில் ஏற்றப்பட்ட பஸ் அல்ல.

புதிய நவீன பஸ்களை மேலும் 2000 பஸ்களை இறக்குமதி செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.
கொழும்புக்கு மட்டுமல்ல நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பஸ்களை பகிர்ந்தளிக்கவுள்ளோம்.
என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!