பயங்கரவாதத்திற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும், எந்த விசாரணைக்கும் முகம் கொடுக்க தயார் எனவும், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இன்று, பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இவ்வாறு சாட்சியம் வழங்கியுள்ளார்.
ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன்று சாட்சியமளித்துள்ளார்.
பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்காக, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கடந்த 26 ஆம் திகதி அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவசர கூட்டம் ஒன்று இருப்பதன் காரணமாக, அன்றையதினம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.
அதனையடுத்து, இன்றையதினம் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய, பாராளுமன்ற தெரிவுக்குழு தீர்மானித்திருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன்று சாட்சியம் வழங்கியுள்ளார்.
இதன் போது கேள்விகளுக்கு பதில் அளித்த ரிஷாத் பதியுதீன்…
பாராளுமன்ற தெரிவுக்குழுவினை அமைக்க வேண்டும் என்று நான் பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டவன்.
எனக்கு எதிராக 10 குற்றச்சாட்டுக்களை சுமத்தி, நம்பிக்கையில்லா பிரரேரணையை சமர்ப்பித்தார்கள்.
அவை பெரியளவிலான குற்றச்சாட்டுக்கள்.
தற்கொலைத் தாக்குதல் நடாத்திய சஹ்ரானை நான் வாழ்கையில் சந்தித்தது இல்லை.
சம்பவம் நடைபெற்றதன் பின்னர் பத்திரிக்கையில்தான் அவரின் படத்தினை கண்டேன்.
தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை எமது கனத்தையில் அடக்கம் செய்ய வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தேன்.
குரானில் எவரையும் கொலை செய்ய சொல்லவில்லை.
எனவே இந்த செயலை செய்தவர்களுக்கு எதிராக ஜாதிபேதங்களுக்கு அப்பால், அனைவரும் ஒன்றினைய வேண்டுகோள் விடுத்தேன்.
51 நாள் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.
அதில் நான் இணைந்து கொள்ளாதன் விரோதத்தில், எனக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள்.
விமல் வீரவங்ச மற்றும் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோருக்கு எதிராக, நான் பொலிஸிஸ் முறைப்பாடு பதிவு செய்திருக்கின்றேன்.
எனக்கு எதிராக பொய்யான குற்றங்களை சொல்வதற்காக.
கேள்வி – அலாவுதீன் உங்கள் கட்சியின் அங்கத்தவராக இருந்தாரா?
அலாவுதீன் என்பவர் ஒரு வர்த்தகர்.
அவரிடம் நான் கேட்ட போது மகன் ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்பு பட்டிருந்ததை அறிந்திருக்கவில்லை.
மொஹதீன் என்பவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் அமைச்சில் வேலை செய்தவர்.
அரச அதிகாரி எனக்கு நீண்ட காலமாக எனக்கு தெரிந்தவர்.
தனது மகன் கைது செய்யப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
நான் அவரது மகன் கைது செய்யப்பட்டமை தொடர்பாக அறிந்து கொள்வதற்கு, தெகிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் பேசினேன்.
அதன் பின்னர் இராணுவத் தளபதியுடன் பேசினேன்.
இராணுவத் தளபதிக்கு மூன்று தடவைகள் தொலைபேசி அழைப்பு எடுத்தேன்.
கேள்வி – ஒன்றரை வருடங்களுக்கு பிறகு தொலைபேசி அழைப்பு எடுங்கள் என இராணுவத் தளபதி கூறியதன் நோக்கம் என்ன?
நான் சந்தேக நபரின் விடுதலை தொடர்பில் பேசவில்லை.
அவர் அவ்வாறு சொன்னதனால் நான் கவலைப்படவில்லை.
கேள்வி – உங்களை இராணுவத்தளபதியுடன் பேசுமாறு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறியதாக அறிகின்றோம். அது தொடர்பில்?
அந்த வேளையில் இராணுவத்தினர் சந்தேக நபர்களை கைது செய்து கொண்டிருந்தார்கள்.
அவர்களின் சிறந்த நடவடிக்கையினால்தான் விரைவாக குற்றவாளிகளை கைது செய்ய முடிந்தது.
கேள்வி – இப்ராகிம் என்பவரை உங்களுக்கு தெரியுமா?
அவர்தான் கொழும்பு வர்த்தக சங்கத்தின் தலைவர்.வியாபாரிகளின் பிரச்சினைகள் தொடர்பான கூட்டங்களில் கலந்துகொள்வார்.
அவருடய ஒரு மகனை எனக்கு தெரியும்.
அவரின் திருமணத்திற்கு நான் சென்றிருக்கின்றேன்.
எனக்கு தெரியும்.
கேள்வி – இன்சாப் அஹமட்க்கு சொந்தமான தொழிற்சாலைக்கு, செப்பு அதிகளவில் கொடுப்பதற்கு நீங்கள் உதவி புரிந்துள்ளீர்களா?
இன்சாப் அஹமட் தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடயவர் என்று செய்தி வெளியாகியதும், அந்த தொழிற்சாலை தொடர்பில் எனது செயலாளர் விசேட கூட்டம் நடாத்திய அறிக்கையை உங்களுக்கு தர முடியும்.
கேள்வி – இப்ராகிம் மிளகாய்த்தூள் வியாபாரத்திற்கு உதவிகள் செய்யப்பட்டதா? சதோசவிற்கு பொருட்களை வழங்கினாரா?
அவர் எனக்கு எதிராகவும் அமைச்சர் தயாகமகேவிற்கு எதிராகவும் குற்றம் சுமத்தியவர்.
தனக்கு நாம் உதவி புரிவதில்லை என்று.
தனிப்பட்ட ரீதியில் அவருக்கு எதுவும் செய்யவில்லை.
சதோசவிற்கு பொருட்களை வழங்கினாரா என்பதை செயலாளரிடம்தான் கேட்டு சொல்ல வேண்டும்.
கேள்வி – அடிப்படைவாதிகளை தெரிந்து கொண்டது எந்தக் காலத்தில்? காத்தான்குடியில் நீங்கள் அரசியல் செய்கின்றீர்களா?
குண்டுத் தாக்குதலின் பின்னர்தான் தெரிந்து கொண்டேன்.
சஹ்ரான் குழு இவ்வாறு செயற்பட்டுள்ளது என்று.
காத்தான்குடியில் பலமான அரசியல் இல்லாதபோதும் அமீர் அலி என்பவர் எனது கட்சி சார்ப்பாக இருக்கின்றார்.
கேள்வி – காத்தான்குடியில் அடிப்படைவாதக்குழு உருவாகியிருக்கின்றது.
உங்கள் கட்சிக்கு இது தொடர்பில் தகவல் கிடைக்கவில்லையா?
2015க்கு பின்னர்தான் சஹ்ரான்குழு உருவாகியதாகத்தான் நாங்கள் செய்தியை பார்க்கும்போது தெரிந்து கொண்டிருக்கின்றோம்.
கேள்வி – நீங்கள் சஹ்ரானை பார்க்கவில்லை என்று கூறுகின்றீர்கள். செய்தியில் ஒன்றில் நீங்களும் சஹ்ரானும் இணைந்து இருக்கும் படம் வெளியாகியுள்ளது. அது தொடர்பில்?
அவர் சஹ்ரான் இல்லை நிஸ்தாப் மௌலவி.
அவருடன் நிகழ்வில் ஒன்றில் கலந்து கொண்டேன்.
அந்த நிஸ்தாப் மௌலவியின் போட்டோவை போட்டு செய்தி போடுகின்றார்கள்.
எனது அம்மாவிற்கு சகோதரி இல்லை.
ஒருவர் இருந்தவர் அவர் இறந்துவிட்டார்.
ஆனால் எனது அம்மாவின் சகோதரியின் மகள் என பொய்யான குற்றச்சாட்டை வைக்கின்றனர்.
கேள்வி – பொய்யான குற்றச்சாட்டை சுமத்துபவர்களுக்கு எதிராக வழக்கு பதியவில்லையா?
எப்போது செய்தி பார்த்தாலும் என் மீது அவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தார்கள்.
அதற்கு எதிராக நான் முறைப்பாடு பதிவு செய்துள்ளேன்.
எனது சமூகமும் நான் பயங்கரவாதிகளினால் வெளியேற்றப்பட்ட போது, அருகில் இருந்த இந்தியாவிற்கு செல்லாது, நாட்டின் மீது கொண்ட காதல் காரணமாக வடக்கிலிருந்து வள்ளத்தில் கற்பிட்டிக்கு வந்தோம்.
இந்த தீவிரவாத செயலை செய்தவர்கள், எமது முஸ்லீம் இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்கள் அல்ல.
எனவே மதத் தலைவர்களிடத்தில் நான் மன்னிப்பு கேட்கின்றேன்.
எமது இஸ்லாம் மதத்தின் பெயரை பயன்படுத்தியதற்கு.
எனவே இதனை வைத்து அரசியல் செய்யாது, தலைவர்கள் அனைவரும் இதனை ஒரு பக்கத்திற்கு தள்ளாது, இஸ்லாம், பௌத்த கிறிஸ்தவ தலைவர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுகின்றேன்.
என்மீது சுமதப்பட்ட 10 குற்றச்சாட்டுக்களும் பொய்யானவை.
பொலிஸார் என் மீது குற்றச்சாட்டுக்கள் இருப்பின் முறைப்பாடு பதிய கோரியிருந்தனர்.
வரலாற்றில் எப்போதும் சுதந்திரமாக அமைச்சர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடு பதிவதற்கு இடமிருந்ததில்லை.
கேள்வி – தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடைபெற்றது தொடர்பில், முஸ்லீம் தலைவர்கள் யாரும் பேசவில்லை ஏன்?
நான், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனைவரும், ஒற்றாக கர்த்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து பேசினோம்.
கேள்வி – வில்பத்து பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை நீங்கள் பிடித்து வைத்துள்ளீர்களா?
வில்பத்து பகுதியில் யாரும் குடியமர்த்தப்படவில்லை.
மன்னார் மாவட்டத்தில்தான் அரை ஏக்கர் காணி வீதம் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கேள்வி – வில்பத்துக்கு வெளியே வடக்கு பகுதியில் 7 குடும்பங்கள் வீடு அமைத்தார்கள். அவர்களுக்கு எதிராக வழக்கு போடப்பட்டுள்ளது. ஆனால் றிசாட் அமைத்த கிராமம், அதற்கு மேல் ஏற்படுத்தப்பட்டுள்ளது?
றிசாட் வழங்கிய வீடுகள், மன்னார் மாவட்டத்தில் நிரந்தரமாக இருப்பவர்கள் அல்ல. அனைவரும் புத்தளம் பகுதியை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகின்றது. அது தொடர்பில்?
நான் தற்போது மீள்குடியேற்ற அமைச்சர் அல்ல.
அதற்கு பொறுப்பானவர்கள் பிரதேச செயலர்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.
அராபி எழுத்துக்களில் வீதி பெயர்களை எழுதுவதை நான் ஏற்கவில்லை.
குரான் அராபி மொழியில் இருக்கின்றது.
அராபி கல்லூரியில் அராபி மொழி பயன்படுத்துவதில் தவறு இல்லை என நினைக்கின்றேன்.
கடற்படையினர் 21 ஏக்கர் மக்களின் காணியில் முகாம் அமைத்துள்ளனர்.
சிலாவத்துறை மக்கள் அதற்கு உறுதி வைத்துள்ளார்கள்.
அதனை தங்களிடம் தருமாறு கேட்கின்றார்கள்.
குரான் தொடர்பில் பிழையாக திரிவுபடுத்தி கருத்தை வெளியிடுகின்றார்கள்.
அதனால் மக்கள் மத்தியில் விரோதம் வலுப்பெற்றுள்ளது.
ஏனைய மதத்தினரை கொலை செய்ய குரான் சொல்லவில்லை.
அது தவறான பிரச்சாரம்.
நான் பௌத்த மக்களுக்கு சொல்வது, எப்போதும் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாட்டை பிளவுபடுத்த நாம் ஒருபோதும் இடமளியோம். அரேபிய நாட்டின் சட்டத்தினை இங்கே நடைமுறைப்படுத்துமாறு கோருவது பிழையானது.
இந்த நாட்டின் சட்டத்தினை மதிக்கத்தான் இஸ்லாம் சொல்கின்றது.
கேள்வி – செப்புத் தொழிற்சாலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றதே?
உண்மையில் அவர்கள் விடுதலை தொடர்பில் யாரும் பேசியதும் கிடையாது.
செய்தியை பார்த்து தெரிந்து கொண்டேன்.
நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட மௌலவி என்னுடய ஆலோசகர் என பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளினால் பெரிதும் பாதிக்கப்பட்டவன் என்ற வகையில், பயங்கரவாதத்திற்கு ஒருநாளும் இடமளிக்கப் போவதில்லை.
நான் தற்போது அமைச்சர் அல்ல.
எந்த விசாரணைக்கும் முகம் கொடுக்க நான் தயாராக இருக்கின்றேன்.
என முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் குறிப்பிட்டுள்ளார். (சி)