திருகோணமலையில், தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, பாடசாலை மாணவர்கள் இன்று நடைபவனியை முன்னெடுத்தனர்.
ஜனாதிபதியின் தேசிய வேலை திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும், போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, சல்லி அம்பாள் மகா வித்தியாலய மாணவர்கள், போதைப்பொருள் எதிர்ப்பு தொடர்பான பதாதைகள் மற்றும் துண்டு பிரசுரங்களை ஏந்திய வண்ணம், நடைபவனியை முன்னெடுத்தனர்.
கிராம மக்களிடையேயும், பெற்றோர்கள் மத்தியிலும், சமூக மட்டத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட நடைபவனியில், ஆசிரியர்கள், பாடசாலை ஊழியர்கள் என பாடசாலை சமூகத்தினர் கலந்துகொண்டனர்.(சி)