நுவரெலியா ஹட்டன் ஸ்டெதன் தோட்டப் பகுதியில், கடந்த 21 ஆம் திகதி காணாமல் போனதாக கூறப்பட்ட வயோதிப பெண், வட்டவலை பகுதியில், ஹட்டன் ஒயாவில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, வட்டவலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வயோதிப பெண், வீடடில் இருந்த நிலையில் திடீரென காணாமல் போயுள்ளதாக தெரிவித்து, அவரின் உறவினர்கள் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இந்த நிலையில், வட்டவலை தோட்ட பொது மக்களால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, இன்று சடலம் மீட்கப்பட்டதாக, பொலிஸார் குறிப்பிட்டனர்.
ஹட்டன் பகுதியில் பெய்த கடும் மழையின் காரணமாக, சடலம் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட வயோதிப பெண், ஹட்டன் ஸடெதன் தோட்ட பகுதியை சேர்ந்த, 79 வயதுடைய பொன்னையா தனபாக்கியம் என்பவர் என, பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில், வட்டவலை பொலிஸார், மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(சி)