வவுனியா வடக்கிற்கு புதிய மத்திய சபை உறுப்பினர்கள்

வவுனியா வடக்கிற்கான, மத்திய சபை உறுப்பினர்கள் 16 பேருக்கு, இன்று நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு, வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர் த.பரமேந்திரா தலைமையில், நெடுங்கேணி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன் போது, மத்திய சபை உறுப்பினர்கள் 16 பேருக்கு, இரண்டாம் கட்ட நியமனமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய உறுப்பினர்களுக்கும், இன்றையதினம் நியமனங்கள் வழங்கப்பட்டன.

வவுனியா, மன்னார் மாவட்டத்திற்கான பயிற்றுவிப்பாளர் அதிகாரி செ.விமலராஜ் நியமனங்களை வழங்கி வைத்ததுடன், மத்திய சபை செயற்பாடுகள் தொடர்பாகவும் நடைமுறை தொடர்பாகவும் விளக்கமளித்துள்ளார்.

நிகழ்வில், வவுனியா வடக்கு கணக்காளர் வி.நாகேசபாலா, நெடுங்கேணி கனகராஜன்குள பொலிஸ் பொறுப்பதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!