யாழ். நெளுங்குளம் வீதியை மூட மக்கள் எதிர்ப்பு.

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட, நெளுங்குளம் – 505 ஆவது குறுக்கு வீதியை மூடுவதற்கு, மாநகர சபை எடுத்த முயற்சி, மக்களின் எதிர்ப்புக் காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

குறித்த வீதியை மூடுவதற்காக, இன்று காலை சென்ற மாநகர சபை உத்தியோகத்தர்கள், மக்களின் எதிர்ப்புக் காரணமாக திரும்பிச் சென்றுள்ளனர்.

கடற்கரைக்குச் செல்வதற்கான, குறித்த குறுக்கு வீதி, யாழ். மாநாகர சபையின் அனுதியுடன், கடந்த 2015 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு செப்பனிடப்பட்டிருந்தது.

இருந்தும், இந்த வருடம், 2019 ஆம் ஆண்டு நகர அபிவிருத்திச் சட்டத்தின் கீழ், குறித்த வீதி மூடப்பட வேண்டும் எனத்தெரிவித்து, நெளுங்குளம் பிரதேச மக்களுக்கு, யாழ். மாநகர சபையால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, பொது மக்கள் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் செய்ய முறைப்பாட்டின் பிரகாரம், குறித்த நடவடிக்கை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதனால், வீதியை மூடும் நடவடிக்கையை இடைநிறுத்தி வைக்குமாறு, யாழ். மாநகர முதல்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், நெளுங்குளம் 505 ஆவது குறுக்கு வீதியை மூடுவதற்கு, யாழ். மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக, மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!