சுண்டிக்குளம் பகுதியில் ஒருதொகுதி கேரள கஞ்சாவுடன் மூவர் கைது (படங்கள் இணைப்பு)

கிளிநொச்சி – சுண்டிக்குளம் பகுதியில் ஒருதொகுதி கேரள கஞ்சாவுடன் இன்று மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்னாயக்கவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து

மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட சட்டவிரோத செயற்பாடுகள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி சத்துரங்க தலைமையிலான குழுவினர் மற்றும் கல்லாறு இளைஞர்களின் உதவியுடன் கிளிநொச்சி – சுண்டிக்குளம் பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, சுண்டிக்குளம் சாளை பகுதியில் வாகனம் ஒன்றில் மிகவும் நுட்பமானமுறையில் கடத்தப்பட்ட 115 கிலோ கஞ்சாவை மீட்டதுடன், வாகன சாரதி உட்பட சந்தேகநபர்கள் மூவரை கைது செய்துள்ளனர்.

கடல்வழியாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பின்னர் சுண்டிக்குளம் கடற்கரையில் இறக்கப்பட்டு சாளை ஊடாக வாகனத்தில் கடத்தப்பட்டபோதே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேடுதல் பணிக்காக பொலிஸ் குற்றத் தடயவியல் பொலிஸாரின் மோப்ப நாயும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் மற்றும் கிளிநொச்சி பொலிஸார் இணைத்து மேற்கொண்டு வருகின்றனர்.(நி)

 

Recommended For You

About the Author: NIBOJAN

error: Content is protected !!