255 மாவட்டங்களில் நீர் சேகரிப்பு திட்டம் – மத்திய அரசு தீவிரம்

இந்தியா முழுவதும் ஜூலை 1-ந்தேதி முதல் 255 மாவட்டங்களில் நீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியாவில் தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவமழை என 2 பருவமழை பெய்கிறது.

பல நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் மழை அதிகமாகவே பெய்து வருகிறது. ஆனாலும் சரியான நீர்சேகரிப்பு முறை இல்லாமையால் பல மாநிலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

விவசாயம், குடிநீர், மற்ற தேவைகளுக்கு தண்ணீர் இல்லாமல் மக்கள் தவிக்கும் நிலை உள்ளது. இதை தடுப்பதற்காக இந்திய மத்தியஅரசு பல்வேறு திட்டங்களை தீட்டி இருக்கிறது.

இந்தியாவில் உள்ள 255 மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை மோசமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அங்கு நீர்சேகரிப்பு மற்றும் நீர்வளத்தை மேம்படுத்த முதல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!