முல்லைத்தீவு மாவட்டத்தில், இடம்பெற்றுவரும் சட்டவிரோத மீன் பிடித்தொழில் நடவடிக்கையினை தடுக்க நடவடிக்கை எடுக்காது விடின், கடந்த வருடத்தைப்போன்று மீண்டும் போராட்டம் நடாத்தும் நிலை ஏற்படும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் நேற்று நடாத்திய ஊடக மாநாட்டின்போதே அவர் இவ்வாறு எச்ரிக்கை விடுத்துள்ளார். (நி)