மட்டக்களப்பில் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரம்  நடுகை நிகழ்வு

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் தேசிய  சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு  பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இயற்கையினால் ஏற்படும் பாதிப்புகள் உலகில் அதிகரித்து வருகின்ற நிலையில் இன்றைய உலக சுற்றாடல் தினம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

இதற்கு அமைய நிலையான  வாழ்வுக்கு நிலையான சூழலை உருவாக்குவோம் என்னும் தலைப்பில் மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கம்  நலன்புரி சங்கத்தின் அனுசணையின்  மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கம்  பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவை சுத்தம் செய்யும் பணிகளுடன் மரம் நடுகை நிகழ்வும்  நடைபெற்றது .

மரம் நடுகை நிகழ்வினை  தொடர்ந்து வீடுகளில் மரம் நடுகையினை ஊக்குவிக்கும் முகமாக மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

உலக சுற்றாடல்  தினத்தை முன்னிட்டு  வைத்தியர் விவேகானந்தராஜா தலைமையில்  நடைபெற்ற  இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார், சிறப்பு விருந்தினராக மாநகர முதல்வர் டி .சரவணபவன் மற்றும் ஞானசூரியம் சதுக்கம்  நலன்புரி சங்கத்தின் உறுப்பினர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலர்  கலந்து கொண்டனர்.

 

 

 

Recommended For You

About the Author: லியோன்

error: Content is protected !!