வீட்டில் இருநதபடியே மருந்து பொருட்களை கொள்வனவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்!!

நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேளையில், மக்கள் தமக்கு தேiவான மருந்துகளை, வீட்டில் இருந்தவாறே கொள்வனவு செய்வதற்கு, சுகாதார அமைச்சு ஒழுங்கு செய்து, அதற்கான முறைகளை அறிவித்துள்ளதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், இன்று ஊடகங்களுக்கும் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

வடக்கு மாகாணத்திலுள்ள மருந்தகங்களில், மருந்தகளை வீடு வரை சென்று விநியோகிக்கக் கூடிய மருந்தகங்களின் பெயர்கள், அவற்றின் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் ஆகியவற்றை கொண்ட பட்டியல் தரப்பட்டுள்ளது.

உங்கள் வீட்டிற்கு அருகாமையிலுள்ள மருந்தகங்களை, தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்பு கொண்டு, உங்களுக்கு தேவையான மருந்துகளை பெற்றுக் கொள்ளலாம்.

முதலில் மருந்தகங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

பின்னர் கைத்தொலைபேசியிலுள்ள வட்ஸ் அப், வைபர் போன்ற செயலிகள் ஊடாக, தங்களின் மருந்து விபரங்கள் அடங்கிய சிட்டையையோ அல்லது கிளினிக் கொப்பியில் உள்ள மருந்து விபரங்கள் அடங்கிய பட்டியலையோ புகைப்படம் எடுத்து அனுப்பவும்;.

மருந்தகங்கள் குறித்த மருந்துகளை, உங்கள் வீட்டிற்கே அனுப்பி வைக்கும் ஏற்பாட்டை மேற்கொள்ளும்.

மருந்துகளின் விலையுடன், அதற்கான போக்குவரத்து செலவையும் நீங்கள் செலுத்த வேண்டி நேரிடலாம்.

என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!