நாட்டின் சில பகுதிகளில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுலில்!!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில், தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டம், மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும், நாளை திங்கள் காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் அன்றையதினம் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த, ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில், நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக, சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள், மக்களின் நலனுக்காகவே என்பதால், அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு, அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில், அடுளுகம மற்றும் கண்டி மாவட்டத்தில் அகுரணை கிராமங்கள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டள்ளன.

எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க அறிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!