இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்களுக்கு அறிவித்தல்!!

இலங்கையில் நேற்றைய தினம் புதிததாகக் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றுள்ளவர்களுள் நான்கு பேர் இந்தியாவிலிருந்து அண்மையில் நாட்டுக்குள் வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த காலப்பகுதியில் இந்தியாவிலருந்து நாடு திரும்பிய அனைவரையும் உடனடியாக அடையாளம் காணுமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

எனவே மார்ச் மாதம் 14 ஆம் திகதி அல்லது அதன்பின் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் அனைவரும் உடனடியாக 021 221 7278 என்றதொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறு நாடு திரும்பியுள்ளவர்கள் அனைவரும் உடனடியாக தம்மை தத்தமது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதுடன் காய்ச்சல், தொண்டை வலி மற்றும் வரட்டு இருமல் போன்ற நோய் அறிகுறிகள் இருப்பின் அருகிலுள்ள அரச வைத்தியசாலையை அணுகுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!