கொரோனா – உலகளாவிய ரீதியான உயிழப்புகள்!!

உலகம் முழுவதும் தீவிரமாக ஆதிக்கம் செலுத்தி வரும், கொரோனா வைரஸ் காரணமாக, இதுவரை 21 ஆயிரத்து 295 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு வரையான காலப்பகுதியில், 4 இலட்சத்து 91 ஆயிரத்து 150 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள நிலையில், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், 48 ஆயிரத்து 440 பேர் புதிய நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஒரே நாளில் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 388 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன், இதுவரை ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 642 பேர் தொற்றிலிருந்து குணமாகி வெளியேறியுள்ளனர்.

இதனிடையே, கடந்த இரண்டு நாட்களில் உயிரிழப்பு 2 வீதம் அதிகரித்து 16 வீதமாக உயர்ந்துள்ளது.

இதேவேளை, கொரோனாவின் உச்சக்கட்ட ஆக்கிரமிப்பில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளே சிக்குண்டுள்ளன.

இத்தாலியில் ஏறத்தாழ 75 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மட்டும் புதிதாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டதில், 3 ஆயிரத்து 500 பேர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இத்தாலியில், 683 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில், கடந்த மாதம் 25ஆ ம் திகதி பூச்சியமாக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரே மாதத்தில் 75 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

அங்கு தினசரி இறப்பவர்களின் எண்ணிக்கை, நூற்றுக்கணக்கில் இருப்பதால், இராணுவ வாகனங்களில் உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டு மொத்தமாக அடக்கம் செய்யப்படுகின்றன.

மேலும், கிறிஸ்தவ நாடான இத்தாலியில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான சவப்பெட்டிகள் கிடைப்பதிலும், கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இந்நிலையில், மற்றொரு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், நேற்று மட்டும் 3 ஆயிரத்து 500 பேர், புதிதாக கொரோனா தொற்றால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 3 ஆயிரத்து 200 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த நாட்டில் நேற்று மட்டும் 656 பேர் மரணித்துள்ளனர்.

இதையடுத்து, பிரான்ஸில் 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 3 ஆயிரம் பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டது.
இவர்களில், 2 ஆயிரத்து 800 பேர் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அங்கு நேற்று மட்டும் 231 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, அமெரிக்காவில் தீவிரமாகப் பரவி வரும் கொரோனாவால், அங்கு தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, பல மடங்காக அதிகரித்துக்கொண்டு செல்கின்றது.

நேற்று மட்டும் அமெரிக்காவில் 13 ஆயிரத்து 355 பேர், புதிய நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், கடந்த 24 மணி நேரத்தில் 247 உயிரிழப்பு பதிவாகியுள்ளதுடன், மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 32 ஆக அதிகரித்துள்ளது.

இது தவிர, ஈரானில் நேற்று ஒரே நாளில் மட்டும் 143 பேர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டாயிரத்து 200 பேர், புதிய நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!