கொரோனா அச்சம் மத்தியிலும் கம்பாறை கல்முனையில் திருட்டு முயற்சி!!

அம்பாறை மாவட்ட கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய அதிபரின் காரியால கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திருடும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில் அயலவர்களின் உதவியினால் முறியடிக்கப்பட்டது.

நேற்று பிற்பகல் பாடசாலையினுள்ளிருந்து வழமைக்கு மாறாக வந்த சத்தத்தை அவதானித்த அயலவர்கள் குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து அதிபர், அபிவிருத்தி குழு அங்கத்தினர் மற்றும் அயலவர் துரிதமாக செயற்பட்டதன் காரணமாக திருட்டு முயற்சி தடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அதிபர் காரியாலத்தினுள் உள்ள பாடசாலை ஆவணங்கள், கணனிகள் உள்ளிட்ட பெறுமதிமிக்க சாதனங்கள் காணப்பட்ட போதிலும் அவை களவாடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக வலயக்கல்வி அலுவலர் மற்றும் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அதிபரினால் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் கொரோனா வைரஸில் இருந்து தமது உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ள மேற்கொண்டுவரும் இக்கட்டான சூழலில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

அத்துடன் குறித்த பாடசாலைக்கு காவலாளி ஒருவரை வழங்கவும் சம்பந்தப்பட்டவார்கள் நடவடிக்கை மேற்கோள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!