வவுனியாவில், ஊடகவியலாளர்கள் உணவு வழங்கியுள்ளனர்!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மதபோதகரின் ஆராதனையில் கலந்துகொண்ட நிலையில், வவுனியா, புளியங்குளம் வடக்கு, முத்துமாரிநகர் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள, 6 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேருக்கு, வவுனியா ஊடகவியலாளர்களால், உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

கொரனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமது நாளாந்த அத்தியாவசிய தேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் காணப்பட்ட குறித்த குடும்பங்களுக்கு, உணவை பெற்றுக்கொடுக்குமாறு, சுகாதார துறையினர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தமிழ் விருட்சம் மற்றும் சிவன் முதியோர் இல்லம் என்பவற்றின் உதவியுடன், உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொண்ட வவுனியா ஊடகவியளாளர்கள், தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களிடம் சென்று நேரடியாக கையளித்தனர்.

மக்களிடம் சென்று கையளிக்க பலரும் அச்சம் தெரிவித்த நிலையில், சுகாதார திணைக்களத்தின் பாதுகாப்பு அறிவுரைகளின் படி, ஊடகவியலாளர்கள் உணவைக் கையளித்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!