யாழ். வலி தெற்கில் உழவர் சந்தை!

பிரதான பொதுச் சந்தைகளைப் பிரித்து, பெரும்பாலான இடங்களில், கிராமிய சந்தைகளை உள்ளுராட்சி மன்றங்கள் அமைத்து, மக்கள் அதிக அளவில் ஒன்றுகூடுவதை தவிர்த்து வருகின்றன.

அதனடிப்படையில், இன்று யாழ்ப்பாணம் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில், மருதனார்மடம் சந்தை மூடப்பட்டு, வட்டாரங்கள் தோறும் உழவர் சந்தை அமைக்கப்பட்டது.

சுகாதார அறிவுறுத்தல்களின் பிரகாரம், மக்கள் அதிகளவில் ஒன்றுகூடுவதைக் கைவிட வேண்டும் என்பது, முக்கியமான விடயமாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

கடந்த செவ்வாய்கிழமை, வடக்கு மாகாணத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது, மக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி, அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்தனர்.

இது பாரிய சுகாதார பிரச்சினையை தோற்றுவிக்கும் என்றும், கொரோனா கிருமியை வலிந்து ஏற்கும் விடயம் என்றும் விமர்சிக்கப்பட்டது.

அதனையடுத்து, மாற்று நடவடிக்கையாக, பொதுச் சந்தைகளை மூடி, கிராமங்கள் தோறும் சந்தைகளை ஏற்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!