கியூபா நாட்டில் இடம்பெற்ற சூறாவளியையடுத்து அவானாஹி றெக்லாவுக்கு அருகில் உள்ள கிராமங்கள் சேதமடைந்த நிலையில் அவற்றின் புனரமைப்பு பணிகளுக்கான நன்கொடையாக 50ஆயிரம் டெலர்களை இலங்கை அரசு வழங்க தீர்மானித்துள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரபனவின் வேண்டுகோளுக்கு அமைய அமைச்சரவையில் அனுமதி பெற்று வழங்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த நோக்கமானது இரு நாடுகளுக்குமிடையே இராஜதந்திர தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டு 60 வருடம் நிறைவடைவதை முன்னிட்டு மேலும் நட்புறவை அதிகரிக்கும் முகமாக இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவு ம் தெரிவிக்கப்படுகிறது. (சே)