தற்போது நடைபெற்றுவரும் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்கு அவுஸ்திரேலிய அணி தகுதி பெற்றுள்ளது.
நேற்று இடம்பெற்ற இங்கிலாந்து அணியுடனான போட்டியில் அவுஸ்திரேலியா 64 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 285 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் 44.4 ஓவர்களில் 221 ஓட்டங்கள் மாத்திரம் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்த நிலையில் தேல்வியை கண்டது இங்கிலாந்து அணி.
இதனை தொடர்ந்து அரையிறுதிக்கு அவுஸ்திரேலியா அணி தகுதியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.(சே)